கும்பம் ராசி அன்பர்களே.! கோபங்களை தவிர்க்க வேண்டும்.
இன்று வீண் வம்புக்கு செல்லாமல் இருப்பது நல்லது. சிலர் வேண்டுமென்றே உங்களைத் தேவையில்லாத காரியங்களில் ஈடுபடுவார்கள். எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும். பெண்களால் விரயச் செலவுகள் அதிகரிக்கும். சூழ்நிலைகளை சரியாகப் புரிந்துகொண்டு முடிவுகளை எடுக்க வேண்டும். தொழில் வியாபாரத்தில் மந்த நிலை காணப்படும். வியாபாரம் தொடர்பான அலைச்சல் அதிகரிக்கும். பழைய பாக்கிகள் வசூல் செய்வதில் தாமதம் இருக்கும். அனுசரித்து சென்றால் மட்டுமே ஓரளவு முன்னேற்றத்தை ஏற்படுத்திக்கொள்ள முடியும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் அலுவலக வேலைகளை முடிப்பதில் தாமதம் ஏற்படும். கணவன்-மனைவிக்கிடையே சின்னதாக வருத்தமடையும் சம்பவங்கள் ஏற்படலாம்.
பிள்ளைகளிடம் கோபப்பட வேண்டாம். முன்கோபங்களை தவிர்த்துவிட வேண்டும். விட்டுக்கொடுத்துச் செல்லவேண்டும். கடன் பிரச்சனை தலை தூக்கும். காதல் சிரமத்தை ஏற்படுத்தும். கோபத்தை கட்டுப்படுத்திக் கொண்டு தெளிவாக செயல்பட வேண்டும். மாணவர்களுக்கு கல்வியில் அக்கறை இல்லாதது போல் இருக்கும். முயற்சி செய்தால் வெற்றி கிடைக்கும். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் போது வெள்ளை நிறத்தில் ஆடை அணிய வேண்டும். வெள்ளை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அப்படியே இன்று சிவபெருமான் வழிபாட்டை மேற்கொண்டு எந்த ஒரு பணியையும் செய்து வாருங்கள் கண்டிப்பாக உங்கள் வாழ்க்கையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டு விடும்.
அதிர்ஷ்டமான திசை: மேற்கு அதிர்ஷ்டமான எண்: 5 மற்றும் 6 அதிர்ஷ்டமான நிறம்: வெள்ளை மற்றும் இளம் மஞ்சள்