கும்பம் ராசி அன்பர்களே.! பிரச்சினைகள் ஏற்பட்டாலும் சரியாகிவிடும்.
இன்று எதார்த்தமாக பேசி உங்களுடைய காரியங்களை எல்லாம் சாதித்துக் கொள்வீர்கள். வசீகரமான தோற்றம் இருக்கும். கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும். மனமும் மகிழ்வாக இருக்கும். கொள்கை பிடிப்போடு செயல்படுவீர்கள். சுபகாரிய பேச்சுக்கள் எல்லாம் முடிவாகி மனநிம்மதியைக் கொடுக்கும். தொழில் வியாபாரத்தில் இருந்துவந்த பின்தங்கிய நிலை இப்போது மாறிவிடும். பிள்ளைகளுடைய கல்வி பற்றிய கவலை நீங்கி விடும். வீட்டிற்கு தேவையான பொருள் சேர்க்கை ஏற்பட்டு விடும். கொடுக்கல்-வாங்கலில் நல்ல முன்னேற்றம் காத்திருக்கின்றது. எடுத்த காரியத்தை முடித்து விட வேண்டும். மன உறுதியுடன் செயல்படுவீர்கள். கொடுக்கல் வாங்கல் விவகாரங்களில் கொஞ்சம் கூடுதல் கவனம் இருப்பது நல்லது. முயற்சி தேவை. அலட்சியம் காட்டாமல் எந்த ஒரு காரியத்திலும் ஈடுபட வேண்டும். குடும்பத்தை பொறுத்த வரை வாக்குவாதங்கள் வந்தாலும் சரியாகிவிடும். பிரச்சினைகள் ஏற்பட்டாலும் சரியாகிவிடும்.
பெண்களுக்கு உற்சாகமான நாளாக அமையும். இல்லத்தில் மட்டும் பணிச்சுமை அதிகமாக இருக்கும். பெண்கள் சுவாச பயிற்சியை மேற்கொண்டு மனதை அமைதியான நிலையில் வைத்துக்கொள்ள வேண்டும். காதலும் கொஞ்சம் குழப்பத்தை ஏற்படுத்தி தான் பின்னர் சரியாகும். காதலின் நிலைபாடுகள் கொஞ்சம் பார்த்து பக்குவமாக கையாள வேண்டும். மாணவர்கள் கல்வியில் நல்ல முன்னேற்றத்தை அடைய முடியும். மாணவர்களுக்கு எந்த ஒரு விஷயத்தையும் தெளிவாக அணுகக் கூடிய ஆற்றல் இருக்கும். ஆனால் கல்விக்கான செலவுகள் இருக்கும். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் போது சிவப்பு நிறத்தில் ஆடை அணிய வேண்டும். சிவப்பு நிறம் உங்கள் அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அப்படியே இன்று சித்தர்கள் வழிபாட்டையும் குருபகவான் வழிபாட்டை மேற்கொண்டு எந்த ஒரு பணியையும் தொடர்ந்து செய்து வாருங்கள் கண்டிப்பாக உங்கள் வாழ்க்கையில் முன்னேற்றம் ஏற்பட்டு விடும்.
அதிர்ஷ்டமான திசை: மேற்கு அதிர்ஷ்டமான எண்: 6 மற்றும் 9 அதிர்ஷ்டமான நிறம்: சிவப்பு மற்றும் வெள்ளை