Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

கும்பம் ராசிக்கு….! நிதானம் வேண்டும்….! விட்டுகொடுக்க வேண்டும்….!!

கும்பம் ராசி அன்பர்களே.! எதிரிகள் பலமிழந்து காணப்படுவார்கள். 

இன்று யாரைப் பற்றியும் விமர்சனம் செய்ய வேண்டாம். கொஞ்சம் விட்டுக்கொடுத்துச் செல்லவேண்டும். பேச்சிலும் செயலிலும் நிதானத்தை கடைபிடிப்பது நல்லது. தயவு செய்து நீங்கள் உணர்ச்சிவசப்படாமல் பேச வேண்டும். சந்திராஷ்டமம் பிரச்சனை குறைந்து விட்டது என்றால் மன குழப்பங்கள் விலகி செல்லும். உறவினர்களிடம் எச்சரிக்கையுடன் நடந்து கொள்ள வேண்டும். பகை பாராட்டாமல் இருப்பது நல்லது. அது உங்களுக்கு வெற்றி ஏற்படுத்தி தரும். வெளியூர் பயணத்தில் சில மாற்றங்கள் ஏற்படும். நிதானமாக பேசவேண்டும். சுமூகமாக இருக்க வேண்டும். மற்றவர்களுக்கு வாக்குறுதிகள் கொடுக்க வேண்டாம். தடைபட்டு வந்த காரியங்களில் தடைகள் நீங்கி விடும். எதிரிகள் பலமிழந்து காணப்படுவார்கள். போட்டி பொறாமைகள் குறைந்துவிடும்.

எதிரிகளின் தொல்லை இல்லாமல் நீங்கள் நிம்மதியாக இருக்கலாம். எதையும் யோசித்து செய்வது சிறப்பை கொடுக்கும். கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை. பெண்கள் சில காரியங்களை செய்யும்போது கவனம் வேண்டும். பெண்களுக்கு மன குழப்பம் கொஞ்சம் கொஞ்சமாக தான் சரியாகும். காதல் இனிமை ஏற்படுத்தி தரும். பிரச்சினைகள் எல்லாம் தீர்ந்துவிடும். மாணவர்களுக்கு உற்சாகமான நாளாக இன்றைய நாள் அமையும். இன்று முக்கியமான பணியை மேற்கொள்ளும் போது பச்சை நிறத்தில் ஆடை அணிய வேண்டும். பச்சை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அப்படியே இன்று அம்மன் வழிபாட்டை மேற்கொண்டு எந்த ஒரு பணியையும் தொடர்ந்து செய்து வாருங்கள் கண்டிப்பாக உங்கள் வாழ்க்கையில் முன்னேற்றம் ஏற்பட்டு விடும்.

அதிர்ஷ்டமான திசை: மேற்கு                                                                                                                      அதிர்ஷ்டமான எண்:   3 மற்றும் 5                                                                                                              அதிர்ஷ்டமான நிறம்: பச்சை மற்றும் நீலம்

Categories

Tech |