Categories
தேனி மாவட்ட செய்திகள்

ஆர்பரித்து கொட்டும் தண்ணிர்… சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி… வனதுறையினர் அறிவிப்பால் மகிழ்ச்சியில் மக்கள்…!!

கும்பக்கரை அருவியில் நேற்று முதல் குளிப்பதற்கு அனுமதி அளித்ததால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

தேனி மாவட்டத்தில் உள்ள பெரியகுளம் பகுதியில் கும்பக்கரை அருவி அமைந்துள்ளது. கடந்த ஆண்டு மார்ச் மாதம் இறுதி முதல் கொரோனா ஊரடங்கால் கும்பகரை அருவியில் குளிப்பதற்கு பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. பின்னர் பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டதால் கும்பக்கரை அருவியில் குளிப்பதற்காக அனுமதி அளிக்க வேண்டும் என சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்ததை அடுத்து பத்து மாதங்களுக்குப் பின்னர் நேற்று சுற்றுலா பயணிகளுக்கு வனத்துறையினர் அருவியில் குளிக்க அனுமதி அளித்துள்ளனர்.

இதனையடுத்து காலை 8 மணி முதல் சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும் கொரோனா கட்டுப்பாடுகள் மற்றும் விதிமுறைகளை பின்பற்றி பொதுமக்கள் கும்பக்கரை அருவிக்கு சென்று வரலாம் என வனத்துறையினர் அறிவித்துள்ளனர். இந்த அறிவிப்பால் வெளி மாநிலங்களில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகின்றனர். கடந்த மாதம் பெய்த தொடர் கனமழையால் கும்பக்கரை அருவியில் தண்ணீர் ஆர்பரித்து கொட்டுகிறது.

Categories

Tech |