Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

கும்ப ராசிக்கு…திடீர் மனமாற்றம் இருக்கும்..மனக்குழப்பம் வேண்டாம்…!

கும்ப ராசி அன்பர்களே …!   இன்று வெற்றிச் செய்திகள் வீடு வந்து சேரும் நாளாக இருக்கும். நட்பு வட்டம் விரிவடையும். கொடுக்கல் வாங்கல்கள் ஒழுங்காகும். பாகப்பிரிவினைகள் சுமுகமாக முடியலாம். வழக்குகள் கூட சாதகமாக இருக்கும். எதிர்பார்த்த பண உதவி கிடைக்கும் மேல் இடத்தை அனுசரித்து செல்வது நல்லது. பணியில் நிறைய அலைய வேண்டியிருக்கும். புதிய பொறுப்புகள் சிலருக்கு கிடைக்கலாம்.

புதிய நட்பு கிடைப்பதுடன் அவர்களது ஆளுமையும் வெற்றிக்கு உதவும். ஆனால் எதிலும் எச்சரிக்கையுடன் செயல்படுவது ரொம்ப நல்லது. பெண்களுக்கு வீண் பேச்சை குறைத்துக் கொண்டு செயலில் ஈடுபடுவது வெற்றியை கொடுக்கும். திடீர் மனமாற்றம் இருக்கும். தேவையில்லாத விஷயத்திற்காக மனக்குழப்பம் அடையாதீர்கள். பொறுமையாக இருங்கள் அது போதும். ஆன்மிக விஷயத்தில் நாட்டம் செல்லும்.

உடல் ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை எந்தவித பிரச்சினையும் இல்லை சிறப்பாகவே இருக்கும். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் போது நீல நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப   நல்லது. நீளம் உங்களுக்கு அதிஷ்டத்தையே கொடுக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று சிவபெருமான் வழிபாட்டையும், சூரியபகவான் வழிபாட்டையும் மேற்கொண்டு காரியத்தைச் செய்யுங்கள் காரியங்கள் அனைத்தும் மிகச் சிறப்பாக நடக்கும்.

 அதிர்ஷ்டமான திசை: கிழக்கு

அதிர்ஷ்ட எண்: 3 மற்றும் 5

அதிஷ்ட நிறம்: நீல மற்றும் சிவப்பு நிறம்.

Categories

Tech |