Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

கும்ப ராசிக்கு…குழப்பம் நீங்கும்… மகிழ்ச்சி உண்டாகும்…!

கும்ப ராசி அன்பர்களே …!     சவாலான காரியங்களையெல்லாம் கையில் எடுத்துக் கொண்டிருக்காதீர்கள். சொந்தபந்தங்கள் அன்புத் தொல்லை அதிகரிக்கும். சிலர் உங்களை தாழ்த்திப் பேசினாலும் விமர்சித்தாலும் கலக்கிக் கொண்டிருக்கதீர்கள். வியாபாரத்தில் பழைய சரக்குகளை போராடி விற்பீர்கள். உத்யோகத்தில் ஈகோ அதிகரிக்கும் கட்டுப்படுத்திக் கொள்ளுங்கள்.

சகிப்புத் தன்மை தேவைப்படும் நாள். பணவரவு ஓரளவு மகிழ்ச்சியை கொடுக்கும். மனதில் இருந்த குழப்பம் நீங்கும். மாணவர்களுக்கு சில முன்னேற்றகரமான சம்பவங்கள் நடக்கும். வியாபாரத்தில் புது யுக்திகளை கையாண்டு சில முன்னேற்ற பாதையை தேர்ந்தெடுத்துக் கொள்வீர்கள். ஆனால் எதையும் ஒருமுறைக்கு இருமுறை யோசித்து மட்டும் செய்யுங்கள். தேவையில்லாத புகழ்ச்சிக்கு ஆளாகக்கூடும்.

காதலர்கள் கண்டிப்பாக பொறுமை காக்க வேண்டும். பேசும்போது நிதானத்தைக் கடைபிடிக்க வேண்டும். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது வெள்ளை நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. வெள்ளை நிறம் உங்களுக்கு அதிஷ்டத்தையே கொடுக்கும்.  இன்று அம்மன் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தைச் செய்யுங்கள் காரியங்கள் அனைத்தும் ரொம்ப நல்லபடியாக நடந்து முடியும்.

அதிர்ஷ்டமான திசை: தெற்கு

அதிர்ஷ்ட எண்: 2 மற்றும் 3

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை மற்றும் மஞ்சள் நிறம்.

Categories

Tech |