கன்னியாகுமரியில் கனமழை கொட்டியதால் வண்டிகள் செல்ல முடியாத அளவிற்கு ரோட்டில் வெள்ளம் காணப்பட்டது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருகின்றது. இந்நிலையில் நேற்று கன்னியாகுமரி மாவட்டம் முழுவதிலும் வெயில் அடித்துக் கொண்டிருந்த நிலையில் திடீரென மழை பெய்துள்ளது. இதேபோன்று மேலும் பல மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்துள்ளது. இதனையடுத்து மார்த்தாண்டம் மற்றும் அதைச் சுற்றியிருக்கும் பகுதிகளில் சுமார் 3 மணி நேரம் பெய்த கனமழையால் பள்ளமான பகுதிகளில் வெள்ளம் பெருக்கெடுத்து காணப்பட்டுள்ளது.
மேலும் நாகர்கோவில் இருக்கக்கூடிய அதன் சுற்றுவட்டார பகுதிகளில் சுமார் 5 மணி நேரம் கனமழை பெய்ததால் நகரத்தின் முக்கிய சாலைகள் மற்றும் தெருக்களில் மழை நீருடன் சாக்கடையும் சேர்ந்து சாலையில் ஆறாக ஓடியது. இதனால் சாலையில் செல்லக்கூடிய பொதுமக்கள் மற்றும் வாகனங்களுக்கு கடும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. மேலும் குமரி மாவட்டத்தில் பெய்த இந்த மழையால் அணைகளுக்கு மிதமான அளவிற்கு தண்ணீர் வந்துள்ளது. இவ்வாறு குமரி மாவட்டத்தில் பெய்த கோடைமழையில், குளிர்ச்சியான சூழல் ஏற்பட்டதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.