Categories
அரசியல் மாநில செய்திகள்

குமரி, கோவை வேணும்…. 30வரை கொடுங்க… குறைஞ்சுற கூடாது… முடிவாகிய தொகுதி பங்கீடு ..!!

அமித் ஷாவுடன் தமிழக முதல்வர், துணை முதல்வர் சந்தித்ததை தொடர்ந்து பாஜகவுக்கு 30 தொகுதிகள் குறையாமல் வழங்கப்படும் என்று தெரிகின்றது.

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கலைவாணர் அரங்கில் பல்வேறு திட்டங்களை அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்த பிறகு, நட்சத்திர விடுதியில் தங்கி உள்ளார். அவரை தமிழக முதலமைச்சரும், துணை முதலமைச்சர் சந்தித்தனர். இந்த சந்திப்பானது அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த சந்திப்பாக பார்க்கப்படுகின்றது. இதில் தமிழகத்தில் கோரிக்கையை சம்பந்தமாக இருப்பதற்கான வாய்ப்புகளும் இருக்கிறது.

7 பேர் விடுதலை என்ற கோரிக்கை மிக முக்கியமாக இருக்கிறது அது தொடர்பாகவும் இந்த ஆலோசனையில் அவர்கள் பேசியதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன. முதலமைச்சர் ரீதியிலும், உள்துறை அமைச்சர் என்ற ரீதியிலும் இது தொடர்பாக பேசுவதற்கான வாய்ப்பு உள்ளது.

இருந்தாலும் இந்த சந்திப்பு அரசியலுக்கான சந்திப்பாக இருக்க தான் அதிக வாய்ப்பு இருக்கிறது. அமித் ஷா வரும் வழிநெடுகிலும் பாஜகவை  முன்னிறுத்தும் வகையிலேயே எல்லாம் அமைந்தது. அமித் ஷா இறங்கியவுடன் சாலையில் இறங்கி தொண்டர்களை சந்தித்தார். அதன் தொடர்ச்சியாக அடுத்தடுத்த சந்திப்புகளில் நடைபெற்று வருகின்றது.

 

தமிழகத்தில் பாரதிய ஜனதா கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணியில் 5 இடங்களில் போட்டியிட்டது. ஒரு நாடாளுமன்றத் தொகுதிக்கு ஆறு தொகுதிகள் இருக்கிறது. அப்படி என்றால் பார்த்தோமென்றால் 30 சட்டமன்ற தொகுதிகளில் குறையாமல் நிச்சயமாக பாரதிய ஜனதா கேட்கும் என்று பாஜக  வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

 

அதுபோக கன்னியாகுமரி, கோவை ஆகிய பகுதிகளில் கடந்த 2016 சட்டமன்ற தேர்தலில் பாஜக இரண்டாம் இடத்தில் வந்தார்கள். எனவே அந்த இடங்களில் அதிகமான தொகுதிகளில் கேட்கப்பட்ட வாய்ப்புகள் இருக்கிறது. அதன் காரணமாகத்தான் அமித்ஷாவுடன் அகில இந்திய பொதுச் செயலாளர் வந்திருக்கிறார். ஒரு தீர்க்கமான முடிவை எடுக்கும் பொழுது அமைப்புரீதியான பொதுச் செயலாளருடன் இருப்பது வழக்கம் எனவே தற்போதைய நிலையில் தொகுதி உடன்பாடு உறுதி செய்யப்பட வாய்ப்பு இருக்கின்றது.

Categories

Tech |