Categories
உலக செய்திகள்

குளிர்காலம் தொடக்கம்…. அவதிப்படும் பிரித்தானியர்கள்…. நோய் தொற்று பாதிப்பு அதிகரிப்பு….!!

குளிர் பருவகாலம் தொடங்கியுள்ளதால் மக்கள் நோய் தொற்றுக்கு ஆளாகுவதாக சுகாதார நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

பிரித்தானியாவில் கொரோனா தொற்று படிப்படியாக குறைந்து வருவதால் அதற்கான கட்டுப்பாடு விதிமுறைகள் அனைத்தும் தளர்த்தப்பட்டு வருகின்றது. இதனால் சமூக இடைவெளியை பின்பற்றுவதல், முககவசம் அணிதல் போன்றவையும் நீக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கடந்த சில தினங்களாக பிரித்தானியாவின் பல பகுதிகளில் குளிர் வாட்டி வதைத்து வருகிறது. மேலும் கடந்த 2020 ஆம் ஆண்டு மார்ச் மாதத்திற்குப் பிறகு முதன்முறையாக கட்டுப்பாடுகள் இல்லாமல் மக்கள் நெருங்கிப் பழகுவதால் பருவகால நோய்கள் அதிகமாக பரவுவதாக கூறப்படுகிறது.

குறிப்பாக கொரோனா தொற்று பரவலில் மக்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக காணப்பட்டதால் பருவ கால நோய்கள் வேகமாக பரவுவதாக சுகாதார நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். இது போன்று நோய்கள் இருப்பதில் எந்தவொரு ஆச்சரியமும் இல்லை என்றும் கூறியுள்ளனர். மேலும் இது குறித்து பிரபல ஆங்கில ஊடகம் செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் “பிரித்தானியர்கள் குளிர் பருவகாலத்தில் மோசமான அறிகுறிகளை அனுபவித்து வருகின்றனர். சான்றாக தொண்டை வலி, நெஞ்சு சளி மற்றும் மூக்கு ஒழுகுதல் போன்றவை உள்ளது” என்று கூறியுள்ளது.

இதனை தொடர்ந்து லண்டனை மையமாகக் கொண்ட மருத்துவர் பிலிப்பா கேய் கூறியதில் “முன் எப்போதும் இல்லாத அளவிற்கு தற்பொழுது குளிர்காலத்தில் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையானது அதிகரித்து காணப்படுகிறது” என்று தெரிவித்துள்ளார். இதனை அடுத்து சமூக வலைதளமான ட்விட்டரிலும் மக்கள் தங்களது நிலையை பதிவிட்டு வருகின்றனர். அதில் ஒருவர் கூறியதாவது “நான் இப்பொழுது இந்த குளிருக்கு முழுமையாக அடிமையாகிவிட்டேன்” இன்னும் சிலர் கூறியதில் “நான் வாரம் முழுவதும் குளிரால் அவதிப்படுகிறேன். எனக்கு இருமல் உள்ளது. ஆனால் கொரோனா தொற்று இல்லை. என் குடும்பத்திற்கும் சளி தொடர்பான பிரச்சினை உள்ளது” என்று தெரிவித்துள்ளார்.

குறிப்பாக கொரோனா தொற்று இப்பொழுதும் இருப்பதால் இது போன்ற அறிகுறிகளை நாம் மிகவும்  கண்டு கொள்வது அவசியமாகும். இது குறித்து உலகின் மிகப்பெரிய கொரோனா தொற்று ஆய்வு மையமான  ZOE கூறியதில் “உங்களுக்கு ஏதேனும் சந்தேகம் எழுந்தால் lateral flow பரிசோதனை செய்யுங்கள். அதில் எதிர்மறையான முடிவு வந்தால் கொரோனா தொற்று இல்லை என்பது உறுதியாகும். ஒருவேளை உங்களுக்கு புதிய  மற்றும் தொடர்ச்சியான இருமல், காய்ச்சல் அறிகுறிகள் தென்பட்டாலோ அல்லது சுவை மற்றும் வாசனையில் ஏதேனும் மாற்றத்தை உணர்ந்தாலோ உடனடியாக PCR பரிசோதனையை மேற்கொள்ள வேண்டும்” என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.

Categories

Tech |