நன்னிலம் அருகில் குளத்தில் பிடிக்கப்பட்ட மீன்களை பொதுமக்கள் ஆர்வத்துடன் வாங்கிச் சென்றுள்ளனர்.
தமிழகத்தில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் வகையில் அரசு கட்டுப்பாடுகளுடன் கூடிய முழு ஊரடங்கை அறிவித்து பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. இதனால் மருந்தகம் உள்ளிட்ட சில கடைகளைத் தவிர்த்து அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டு இருக்கின்றது. எனவே இறைச்சி பொருட்களான மீன், ஆடு, கோழி போன்றவை விற்பனை செய்ய முடியாததால் மக்கள் சிரமம் அடைந்து வருகின்றனர்.
இதனையடுத்து கிராமத்தில் இருப்பவர்களுக்கு கடல்மீன் கிடைக்காததால் குளத்தில் பிடிக்கப்படும் மீன்களை வாங்குவதற்கு மக்கள் தேடி அலைகின்றனர். இந்நிலையில் மூங்கில்குடி கிராமத்தில் குளத்தில் பிடிக்கப்பட்ட மீன்களை பொதுமக்கள் ஆர்வத்துடன் வாங்கிச் சென்றுள்ளனர்.எனவே விரால் ஒரு கிலோ 600 க்கும், கெண்டை ரூபாய் 200 க்கும், சிலேபி ரூபாய் 200 க்கும், குறவை ரூபாய் 400 க்கும் விற்பனை செய்யப்பட்டது. இவ்வாறு குளத்தில் பிடிக்கப்பட்ட மீன்கள் சில மணி நேரத்தில் விற்பனை செய்து முடிந்துவிட்டதால் சிலருக்கு மீன் கிடைக்காமல் ஏமாற்றத்துடன் சென்றுள்ளனர்.