தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலில் தசரா திருவிழா கடந்த 6ஆம் தேதி கொடியேறி தொடங்கியுள்ளது. தூத்துக்குடி மாவட்டம், குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலில் தசரா திருவிழா கடந்த 6ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
இந்நிலையில் 6 ஆம் திருவிழா முதல் 9 ஆம் திருவிழா வரை காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை பக்தர்கள் சுவாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து வருகின்ற 15ஆம் தேதி 10 ஆம் திருவிழா நாளன்று பக்தர்கள் யாரும் இல்லாமல் கோவில் முன்பாக எளிமையான முறையில் திருவிழா நடைபெற உள்ளது. மேலும் 10 ஆம் திருவிழா முதல் 12ஆம் நாள் திருவிழா வரை கோவிலில் சுவாமி தரிசனத்துக்கு பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை.