நடிகை அனுஷ்கா சர்மா முதல் முறையாக தனது குழந்தையின் புகைப்படத்தை சமூகவலைத்தள பக்கத்தில் வெளியிட்டுள்ளார் .
பாலிவுட்டில் முன்னணி கதாநாயகியாக வலம் வருபவர் அனுஷ்கா சர்மா . இவர் இந்திய அணியின் கிரிக்கெட் வீரரான விராட் கோலியை காதலித்து திருமணம் செய்து கொண்டார் . கடந்த 2017 ஆம் ஆண்டு இவர்களது திருமணம் இத்தாலியில் மிக பிரம்மாண்டமாக நடைபெற்றது. இதையடுத்து இந்த தம்பதிக்கு கடந்த மாதம் 11 ஆம் தேதி பெண் குழந்தை பிறந்தது.
We have lived together with love , presence and gratitude as a way of life but this little one , Vamika ❤️ has taken it to a whole new level !
Tears , laughter , worry , bliss – emotions that have been experienced in a span of minutes sometimes ! pic.twitter.com/pOe2GQ6Vxi— Anushka Sharma (@AnushkaSharma) February 1, 2021
இந்நிலையில் நடிகை அனுஷ்கா ஷர்மா முதல்முறையாக தனது மகளின் புகைப்படத்தை சமூகவலைத்தள பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அந்தப் புகைப்படத்தில் விராட் – அனுஷ்கா தங்களது செல்ல மகளை பார்த்து சிரித்தபடி நிற்கின்றனர் . மேலும் இந்த குழந்தைக்கு ‘வாமிகா’ என பெயரிட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர். தற்போது இந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது