இளம்பெண் ஒருவர் குழந்தையை கொலை செய்ய முயற்சித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கனடாவில் Regina என்ற இடத்தில் குழந்தை ஒன்று மூச்சின்றி கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. இந்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் மருத்துவ உதவி குழுவிற்கு தகவல் அனுப்பி உள்ளனர். ஆனால் மருத்துவக்குழுவினர் வர தாமதம் ஆனதால் அவர்களே அந்தக் குழந்தைக்கு முதலுதவி செய்துள்ளனர். அதன் பிறகு வந்த அவசர மருத்துவ உதவி குழுவினர் குழந்தையை பரிசோதித்து உள்ளனர். அந்தப் பரிசோதனையில் குழந்தைக்கு எத்தனால் கொடுக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.
ஆனால் சம்பவம் நடந்தபோது குழந்தையின் பெற்றோர்கள் வீட்டில் இல்லை. இதுகுறித்து விசாரணை நடத்தி வந்த போலீசார் Jessica Rae Fehr என்ற இளம்பெண்ணை குழந்தையை கொலை செய்ய முயற்சித்த காரணத்திற்காக கைது செய்தனர். மேலும் இந்த இளம்பெண் மீது தாக்குதல், கொலை முயற்சி ஆகிய குற்றச்சாட்டுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து இளம்பெண் Jessica நீதிமன்றத்தில்ஆஜர் படுத்தப்பட்டார் .அத்துடன் இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.