குழந்தைகளுக்கு நாளை முதல் தடுப்பூசி செலுத்தப்படும் என்று ஸ்பெயின் அரசு தெரிவித்துள்ளது.
ஸ்பெயின் நாட்டில் ஏற்கனவே 12 வயதிற்கு மேலான 90% குழந்தைகளுக்கு கொரோனா தொற்றுக்கு எதிரான தடுப்பூசியின் இரு தவணைகளும் செலுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் கொரோனா தொற்றின் பரவல் காரணமாக 5 முதல் 11 வயதிற்கு உட்பட்ட குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
அதிலும் நாளை முதல் அக்குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்தப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது. இதற்காக பைசர் மற்றும் பயோடெக் நிறுவனங்களில் இருந்து குழந்தைக்கான தடுப்பூசிகள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளன. மேலும் அவை குளிரூட்டப்பட்ட கிடங்குகளில் வைக்கப்பட்டுள்ளன.