Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

குழந்தைகள் வார்டில் சுற்றித்திரிந்த வாலிபர்…. அடி நொறுக்கிய பொதுமக்கள்…. விசாரணையில் தெரியவந்த உண்மை….!!

அரசு மருத்துவமனையில் சுற்றித்திரிந்த நபரை பிடித்து பொதுமக்கள் சரமாரியாக அடித்துள்ளனர்.

திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் நாள் தோறும் ஆயிரத்திற்கும் அதிகமான நபர்கள் சிகிச்சை பெற்று செல்கின்றனர். இந்நிலையில் அங்கு இருக்கும் குழந்தைகள் வார்டு பிரிவில் கடந்த ஒரு வாரமாக மர்ம நபர் ஒருவர் சுற்றித்திரிந்துள்ளார். இதனால் சந்தேகமடைந்த மருத்துவமனை ஊழியர்கள் அந்த நபரிடம் விசாரணை நடத்தியதில் நோயாளிகளுடன் உதவிக்கு வந்துள்ளதாக கூறியுள்ளார்.

இதனை அடுத்து குழந்தைகள் பிரிவில் இருந்த அவரை குழந்தையை கடத்த வந்திருப்பதாக நினைத்து அங்கிருந்தவர்கள் பிடித்து சரமாரியாகத் தாக்கி மருத்துவமனை நிர்வாகம் மூலமாக காவல்துறையினரிடம் ஒப்படைத்துள்ளனர். இதனை தொடர்ந்து காவல்துறையினர் நடத்திய விசாரணையில் அவர் குரிசிலாப்பட்டு பகுதியில் வசிக்கும் சக்திவேல் என்பதும், சற்று மனநிலை பாதிக்கப்பட்டவர் என்பதும் காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. மேலும் மனநிலை பாதிக்கப்பட்ட சக்திவேலை காவல்துறையினர் விடுவித்துள்ளனர்.

Categories

Tech |