அனைத்து மொழிகளிலும் நடித்த சமீரா ரெட்டி தன்னுடைய குழந்தைகளுடன் பொழுதை கழித்து வருகிறார்.
தமிழ், இந்தி, தெலுங்கு என பல மொழிகளில் உள்ள படங்களில் நடித்து வந்த சமீரா ரெட்டி கடந்த ஆண்டு 2014ல் தொழிலதிபரான அக்ஷய் என்பவரை திருமணம் செய்து கொண்டார். திருமணம் முடிந்த பிறகு சமீரா தன்னுடைய குடும்பத்தை குடும்ப தலைவியாக நின்று கவனித்து வந்தார். இதனால் அவர் சினிமாவில் இருந்து சற்று விலகி இருந்த போதிலும் பொது நிகழ்ச்சிகளில் அவ்வப்போது கலந்து கொண்டுதான் இருந்தார்.
ஆனாலும் அவர் அதிகப்படியான நேரத்தை தன்னுடைய குழந்தைகளிடமே செலவழிப்பார். தன்னுடைய குழந்தைகளை வளர்ப்பதில் பொழுதை போக்கினார். சமீரா தன்னுடைய சமூக வலைத்தளத்தில் அவ்வப்போது குழந்தைகளின் புகைப்படம் மற்றும் வீடியோக்களை பதிவிடுவார். அந்தவகையில் தற்போது தனது அன்பு குழந்தைகளின் அழகிய வீடியோ ஒன்றை பதிவு செய்து வருகிறார்.