Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

14 வயது சிறுமி…. நடந்த கொடுமை சம்பவம்…. கைது செய்த காவல்துறையினர்….!!

14 வயதுடைய சிறுமிக்கு இளம் திருமணம் செய்து வைத்ததினால் பெற்றோர் மற்றும் உறவினர்கள் என 3 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள மொரப்பூர் பகுதியில் வசிக்கும் 14 வயதுடைய சிறுமி அதே பகுதியில் அரசு பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் சிறுமி திடீரென வீட்டில் இருந்து காணாமல் போயுள்ளார். இது பற்றி சிறுமியின் தந்தை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அந்தப் புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தியுள்ளனர். அதில் காணாமல் போன சிறுமி காவல்நிலையத்தில் ஆஜராகியுள்ளார்.

அப்போது அவரிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தியுள்ளனர். அதில் தனக்கு 14 வயது ஆகிறது எனவும், பின் 29 வயதுடைய வாலிபருக்கு கடந்த பிப்ரவரி மாதம் உறவினர் மற்றும் பெற்றோர் இணைந்து கட்டாய திருமணம் செய்து வைத்ததாக கூறியுள்ளார். இதனையடுத்து திருமணத்தில் தனக்கு விருப்பம் இல்லாததால் வீட்டை விட்டு வெளியே சென்று விட்டதாக சிறுமி தெரிவித்துள்ளார். இதைத் தொடர்ந்து சிறுமிக்கு இளம் வயது திருமணம் செய்து வைத்த உறவினர், தந்தை, கணவர் ஆகிய 3 பேரையும் போஸ்கோ சட்டத்தின் கீழ் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

Categories

Tech |