சென்னை பூந்தமல்லி அருகே மனைவி மற்றும் மகன் பிரிந்து சென்ற விரக்தியில் டைலர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை பூந்தமல்லியை அடுத்த அமைந்தகரை பகுதியில் எம். எம். காலனியில் வீரராகவன்(47 வயது ) என்பவர் வசித்து வருகிறார் . அவரின் மனைவி திலகவதி (43வயது ) மற்றும் அவருடைய மகன் ஆகிய மூவரும் வசித்து வருகிறார்கள் . வீரராகவன் டெய்லர் தொழில் செய்பவர்.
இந்நிலையில் மதுப்பழக்கம் உடைய வீரராகவன் தினமும் மது அருந்திவிட்டு வந்து தன் மனைவியை துன்புறுத்தி வந்துள்ளார். அதனால் மனவேதனை அடைந்த அவருடைய மனைவி தன் மகனை அழைத்துக்கொண்டு அவரது தாய் வீடான நங்கநல்லூர் பகுதிக்கு சென்றுவிட்டார் .
இதனால் வீரராகவன் மட்டும் தனிமையில் இருந்து வந்த நிலையில் நேற்று குடிபோதையில் தனியாக இருந்தபோது வீட்டில் உள்ள மண்ணெண்ணையை அவர் மீது ஊற்றி தீ பற்ற வைத்துக்கொண்டார். தீயானது அவர் உடலில் பரவியதால் அந்த வலியினால் அலறிக் கொண்டு இருந்தார்.
அவரின் அலறல் சத்தத்தை கேட்டு அக்கம்பக்கத்தில் இருந்த மக்கள் ஓடி வந்தனர் . அங்கு கதவை திறந்து பார்த்தபோது , அவர் தீயில் உடல் கருகி உயிர் இறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர் .அதன் பிறகு உடனடியாக காவல்துறைக்கு தகவல் அளித்தனர் .
அந்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் ,வீரராகவனின் உடலை மீட்டு உடற்குரு ஆய்வுக்காக அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர் . இதனையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணையில் நடத்தி வருகிறார்கள் .