Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

கார்-ஸ்கூட்டர் நேருக்கு நேர் மோதல்…. கொத்தனார் பரிதாபம்…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி….!!

கார்-ஸ்கூட்டர் நேருக்கு நேர் மோதியதால் கொத்தனார் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து விட்டார்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள முளகுமூடு கூட்டமாவுவிளை பகுதியில் கனிஷ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கொத்தனாராக பணிபுரிந்து வந்துள்ளார். இவருக்கு திருமணமாகி மனைவியும் இரண்டு குழந்தைகளும் இருக்கின்றனர். இந்நிலையில் கனிஷ் தனது ஸ்கூட்டரில் குழித்துறை சென்றுவிட்டு மதியம் 1 1/2 மணியளவில் முளகுமூடு நோக்கி புறப்பட்டார். அப்போது மார்த்தாண்டம் மேம்பாலத்தில் சென்று கொண்டிருந்த போது எதிரே வந்த ஒரு காரும் கனிஷ் ஓட்டி வந்த ஸ்கூட்டரும் நேருக்கு நேர் மோதியது.

இதனால் கனிஷ் ஸ்கூட்டரில் இருந்து தூக்கி எறியப்பட்டு பலத்த காயம் அடைந்ததால் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இதுகுறித்து தகவலறிந்த மார்த்தாண்டம் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கனிஷ் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குழித்துறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து மார்த்தாண்டம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முத்துகிருஷ்ணன் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றார்.

Categories

Tech |