பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 27 பேர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது.
பெரு நாட்டின் சுங்க தொழிலாளர்கள் தங்கள் குடும்பத்தினருடன் அயாகுசோ நகரிலிருந்து ஆரிகுப்பா பகுதிக்கு செல்ல பேருந்தில் பயணம் செய்து கொண்டிருந்தனர். அப்போது பெருவியன் என்ற பகுதி வழியாக செய்து கொண்டிருக்கும்போது திடீரென்று பேருந்து கட்டுப்பாட்டை இழந்து 250 மீட்டர் ஆழமுள்ள பள்ளத்தில் கவிழ்ந்து விழுந்து விபத்துக்குள்ளானது.
இந்தத் தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மீட்பு குழுவினர் மற்றும் தீயணைப்பு வீரர்களுடன் இணைந்து விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். இந்த விபத்தில் சிக்கி 27 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் படுகாயம் அடைந்தவர்களைமீட்பு குழுவினர் மீட்டு நாஸ்கா நகரில் உள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். இந்த விபத்து நடந்ததற்கான காரணம் குறித்த தகவல் எதுவும் வெளியாகவில்லை. மேலும் இந்த விபத்து குறித்து பெருவியன் நகர போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.