Categories
உலக செய்திகள்

எவனையும் காணோம்… நடு ரோட்டில் நிம்மதியாக குறட்டை விட்டு தூங்கும் சிங்கங்கள்… வைரலாகும் காட்சி!

ஊரடங்கு காரணமாக மனிதர்கள் வீட்டு சிறையில் இருக்கும் நிலையில் சிங்கங்கள் ஹாயாக நடு ரோட்டில் படுத்து உறங்கும் காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது..

கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வரும்நிலையில் பல நாடுகளும் ஊரடங்கை அறிவித்துள்ளன.. அந்த வகையில் தென் ஆப்பிரிக்காவும் ஊரடங்கு உத்தரவை பிறப்பித்துள்ளது. இதனால் அங்கு மக்கள் அனைவரும் வீட்டுக்குள்ளேயே முடங்கிக் கிடக்கின்றனர்.

இந்த நிலையில் தென் ஆப்பிரிக்காவின் குரூகர் தேசிய வனவியல் பூங்காவில் 10க்கும் மேற்பட்ட சிங்கங்கள் சாலையில் ஹாயாக படுத்து கிடக்கும் காட்சி வெளியாகி வைரலாகியுள்ளது. இந்த அரிய காட்சியை அங்கு ரேஞ்சராக இருக்கும் ரிச்சர்ட் சவுரி (Richard Sowry) படமெடுத்து பதிவிட்டுள்ளார்..

கொரோனா ஊரடங்கு உத்தரவு காரணமாக சுற்றுலாப் பயணிகள் வருகை இல்லாமல் அமைதிப் பள்ளத்தாக்காக  மாறிவிட்ட இந்த தேசிய வனவியல் பூங்காவில் தங்களை படமெடுத்த ரேஞ்சரை இந்த சிங்கங்கள் கண்டு கொள்ளாமல் குறட்டை விட்டு தூங்கிக் கொண்டிருக்கின்றன.

இதனால் இந்த சிங்கத்திற்கு மனித வாடை மறந்து விட்டதோ என்றும், உண்மையான உரிமையாளர்கள் தங்கள் இடத்தை எடுத்துக்கொள்கிறார்கள் என்றும் கமெண்ட்கள் வந்து கொண்டிருக்கின்றன.

Categories

Tech |