கோயம்பேடு மார்க்கெட்டில் காய்கறி விற்பனை செய்ய இன்று மாலைக்குள் அனுமதிக்காவிட்டால் நாளை முதல் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபடப்போவதாக சிறு, மொத்த வியாபாரிகள் சங்கத்தினர் அறிவித்துள்ளனர்.
கோயம்பேட்டில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்திற்குப் பின் செய்தியாளர்களைச் சந்தித்த சிறு, மொத்த வியாபாரிகள் சங்க தலைவர் முத்துக்குமார், கோயம்பேட்டில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சிறு, மொத்த காய்கறி விற்பனை கடைகள் இருப்பதாகவும், அந்தக் கடைகளில் காய்கறி விற்பனை செய்ய கடந்த ஆறு மாதத்திற்கும் மேலாக தமிழக அரசு அனுமதி அளிக்காமல் இருந்து வருவதாகவும் குற்றம் சாட்டினார்.