கோவிட் -19 என்று அழைக்கப்படும் கொரோனா வைரஸ்க்கும் சாதாரண வைரஸ்க்கும் உள்ள வித்தியாசம் குறித்து இந்த செய்தித் தொகுப்பில் காண்போம்.
கோவிட் -19 என்று அழைக்கப்படும் புதிய கொரோனா வைரஸானது. ஏற்கனவே உள்ள கொரோனோ வைரஸ் குடும்பங்களில் புதியதாக தோன்றிய வைரஸ் என்று உலக சுகாதார ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அதிகமான பாதிப்பை ஏற்படுத்தும் இந்த வைரஸும், சளி, இருமல், சுவாச கோளாறு உள்ளிட்ட லேசான பாதிப்புகளை ஏற்படுத்தும் வைரஸும் ஒன்றல்ல. ஆகவே சாதாரண கொரோனா வைரஸிற்கும், கோவிட் -19 வைரஸ்க்கும் உள்ள வித்தியாசத்தை நன்கு அறிந்து புரிதலை ஏற்படுத்திக் கொள்வது தற்போதைய சூழ்நிலைக்கு மிகவும் நல்லது.
ஏனெனில் ஏராளமான வாட்ஸப் பதிவுகள் மனிதர்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தி பெரிய பிரச்சனையை ஏற்படுத்தி விடுகின்றன.