Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

இதை நம்பி தான் இருக்கோம்…. 4 ஆண்டுக்கு பிறகு நடந்த சம்பவம்….. மகிழ்ச்சியில் கோவில்பட்டி மக்கள்….!!

தீவிரமடைந்து வரும் வடகிழக்கு பருவ மழையால் தமிழகம் முழுவதும் ஆங்காங்கே கனமழை தொடர்ந்து பெய்து வருகிறது. அந்த வகையில், தூத்துக்குடி மாவட்டத்தில் ரெட் அலர்ட் கொடுக்கப்பட்ட நிலையில், பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து கண்மாய்கள், குளங்கள், ஏரிகள் நிரம்பி வழிய தொடங்கியுள்ளன. தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில், திருவேங்கடம் உள்ளிட்ட பகுதிகளில் பெய்த கனமழையால் அப்பகுதி உப்பாற்றில்  வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதன் காரணமாக,

தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு அகிலாண்டேஸ்வரி அம்மன் திருக்கோவில் அருகே உள்ள உப்பாறு தடுப்பணை நிரம்பி வழிந்து அப்பகுதியை சுற்றியுள்ள கிராமங்களில் விவசாயத்திற்கு பெரிதும் உதவியுள்ளது. இந்த நிகழ்வால் அப்பகுதி விவசாயிகள் மிகவும் மகிழ்ச்சி அடைந்ததுடன், விவசாயத்திற்கான பணிகளில் மும்முரமாக ஈடுபட தொடங்கியுள்ளன. அதேபோல்,

கோவில்பட்டி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் தொடர்ந்து பெய்து வந்த கனமழையின் காரணமாக, வேலாயுதபுரம், அத்தை கொண்டான், வானரமுட்டி உள்ளிட்ட பகுதிகளில் ஏழு கண்மாய்கள் நிரம்பி வழிகின்றன. கிட்டத்தட்ட 4 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த கண்மாய்கள் உடையும் அபாயத்தில் இருக்கின்றன எனவும், கண்மாய்களில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வீணாக சாலைகளில் ஓடுவதை தவிர்க்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனவும்,

இந்த தண்ணீரை நம்பி தான் வரக்கூடிய காலங்களில் விவசாய பணிகளை மேற்கொள்ள உள்ளதாகவும் விவசாயிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். தொடர் மழையின் காரணமாக, கோவில்பட்டியில் நகர் பகுதிகளின்  பல்வேறு இடங்களில் சாலை மிகுந்த சேதமடைந்துள்ளதால் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். 

Categories

Tech |