கோவில் உண்டியலை திருடிய வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
திருப்பத்தூர் மாவட்டத்திலுள்ள வரசக்தி விநாயகர் கோவிலில் கடந்த 2 நாட்களுக்கு முன்பாக உண்டியல் திருட்டு போனது தொடர்பாக காவல்துறையிடம் கோவில் நிர்வாகிகள் புகார் அளித்ததின் பேரில் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்நிலையில் சான்றோர் குப்பம் பகுதியில் வசிக்கும் நவின் குமார் என்பவரை சந்தேகத்தின் அடிப்படையில் மடக்கிப் பிடித்து காவல்துறையினர் விசாரணை நடத்தினர்.
அந்த விசாரணையில் அவர் உண்டியலை திருடிச் சென்றதும், அந்தப் பணத்தில் தனக்கு செல்போன் வாங்கியதும் காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. இதனையடுத்து அவர் மீது வழக்குப்பதிவு செய்து நவீன் குமாரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.