கோவில் முன்பாக தேங்கி நிற்கும் தண்ணீரை பொதுமக்கள் அகற்றக்கோரி தமிழக அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருவள்ளூர் மாவட்டத்தில் பெருமாள் கோவில் அமைந்திருக்கிறது. இந்தக் கோவிலின் முன்பாக 100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். அதன்பின் கோவிலின் முன்பாக இருக்கும் கடை விதிகளின் ஓரமாக தேங்கி நிற்கும் தண்ணீரால் துர்நாற்றம் வீசுவதால் பொதுமக்களுக்கு அவதி ஏற்பட்டுள்ளது.
இது தொடர்பாக பலமுறை புகார் கொடுத்தும் நிர்வாகம் மற்றும் அதிகாரிகள் எந்தவிதமான நடவடிக்கை எடுக்காததால் தமிழக முதலமைச்சரின் தனிப்பிரிவுக்கு மின்னஞ்சல் மூலமாக பொதுமக்கள் புகார் அளித்துள்ளனர். இதனையடுத்து கால தாமதம் செய்யாமல் கோவிலின் முன்பு தேங்கி நிற்கும் தண்ணீரை அகற்றி கழிவுநீர் செல்ல முறையான கால்வாய் அமைத்து தருமாறு பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.