Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

கோவில் முன் அனாதையாக அழுது கொண்டிருந்த குழந்தை மீட்பு ….!!

ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டை அருகே கோவில் முன்பு அழுதுகொண்டிருந்த பிறந்து ஒரு மாதமே ஆன ஆண் குழந்தையை அப்பகுதி மக்கள் மீட்டு போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

வாலாஜாபேட்டை அருகே உள்ள வன்னிவேடு கிராமத்தில் உள்ள அகத்தீஸ்வரர் ஆலயம் முன்பு குழந்தையின் அழுகுரல் கேட்டுள்ளது. உடனடியாக அங்கு சென்ற பொதுமக்கள் அழுதுகொண்டிருந்த ஆண் குழந்தையை மீட்டனர். அந்த குழந்தை பிறந்து ஒரு மாதமே இருக்கும் என கூறப்படுகிறது. இந்த சம்பவம் குறித்து வாலாஜாபேட்டை காவல்துறைக்கு பொதுமக்கள் தகவல் அளித்துள்ளார். சம்பவ  இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் ஆதரவின்றி வீசி சென்ற குழந்தையை மீட்டு சிகிச்சைக்காக வாலாஜாபேட்டை அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதித்தனர்.

கோவில் முன்பு குழந்தையை வீசிச் சென்றது யார் என்பது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். பிறந்து ஒரு மாதமே ஆன ஆண் குழந்தையை அடையாளம் தெரியாத நபர்கள் வீசிச் சென்ற சம்பவம் அப்பகுதி மக்களுக்கிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |