கோவிலில் மர்ம நபர்கள் புகுந்து அம்மன் நகையை திருடி சென்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது .
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியை அடுத்துள்ள கவரைப்பேட்டை அருகே ஏ.என்.குப்பம் கிராமத்தில் எட்டியம்மன் கோவில் ஒன்று அமைந்துள்ளது. இந்த கோவில் கருவறையையொட்டி உள்ள ஜன்னலை உடைத்து கோவிலுக்குள் நுழைந்த மர்ம நபர்கள் சிலர் அம்மன் கழுத்தில் இருந்த வெள்ளி தாலியை திருடிச் சென்றுள்ளனர்.
இதனால் அதிர்ச்சி அடைந்த கிராம மக்கள் கவரப்பேட்டை போலீசில் புகார் அளித்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது .