Categories
மாநில செய்திகள்

“கோவைக்கு பெரிய பூட்டு வைக்கும் அண்ணாமலை”…. பகீர் கிளப்பிய ராஜீவ் காந்தி….!!!!

கோவையில் நடைபெற்ற கார் சிலிண்டர் வெடிப்பு விபத்து விவகாரம் அடுத்தடுத்த சர்ச்சைகளை கிளப்பி வருகிறது. கைது, விசாரணை, தடயங்கள் சேகரிப்பு, என்.ஐ.ஏ விசாரணை என பரபரப்பை கூட்டி வருகிறது. இது குறித்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலை சில குற்றச்சாட்டுகளை முன் வைத்துள்ளார். இதற்கு திமுகவின் செய்தி தொடர்பு இணைச் செயலாளர் ராஜீவ் காந்தி கடமையாக விமர்சனம் செய்துள்ளார். சென்னையில் நேற்று நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய ராஜீவ்காந்தி, அண்ணாமலை ஒரு அரசியல் கோமாளி. அரசியல் பிழைப்பிற்காக பேசி வருகிறார். இவர் வெளியிட்ட அறிக்கை காவல்துறையை களங்கப்படுத்தும் வகையில் அமைந்துள்ளது. சென்னைக்கு அடுத்தபடியாக வளர்ந்து வரும் நகரமாக கோவை இருக்கிறது. எனவே வாக்கு வாங்கி அரசியலுக்காக பாஜக பதற்றத்தை கூட்டி வருகிறது. அதனைத் தொடர்ந்து கர்நாடக மாநிலத்தில் இருந்து இடம்பெயரறும் தொழில் நிறுவனங்கள் கோவையை நோக்கி படையெடுத்து வருகிறது.

இதனால் கோவை அடுத்த கட்ட வளர்ச்சியை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. ஆனால் பெங்களூருவில் லஞ்ச ஊழல் அதிகமாக உள்ளது. தொழில் துறையினரின் பார்வையில் கர்நாடகா முதல்வர்‌ PayCM மாறிவிட்டார். இதனால் கோவை பக்கம் வரத் தொடங்கியுள்ளனர். இந்த இடத்தில் பெருமைமிகு கன்னடன் என்று கூறும் அண்ணாமலை, கோவை பதற்றமாக உள்ளது. எனவே இங்கு வரும் நிறுவனங்களை கர்நாடகாவிற்கு கொண்டு செல்ல திட்டமிடுகிறார். கோவை வந்தால் தொழில் செய்ய முடியாது என்று மீண்டும் கூறி வருகிறார். இதற்காகவே கோவையை பதற்றத்துடன் வைத்திருக்க வேண்டும் என்று நினைக்கிறார். இதனையடுத்து தமிழக அரசியலில் காலடி எடுத்து வைக்க வேண்டும் என்ற எண்ணம் அவருக்கு முன்கூட்டியே இருந்துள்ளது. இதற்காக சில ஆய்வுகளையும் செய்திருக்கிறார். அடுத்த ஒன்றரை ஆண்டுகளில் பாஜக தலைவராக வந்துள்ளார். பத்திரிகையாளர் ஒருவரை வைத்து பாஜக நிர்வாகியான ராகவனை முதலில் காலி செய்தார். தற்பொழுது வானதி சீனிவாசன் ஆகியோரை காலி செய்து அண்ணாமலை வேலை செய்கிறார் என்று அவர் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |