கன்னியாகுமரி மாவட்டத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக அணையின் நீர்மட்டத்தை பொதுப்பணித்துறை அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் கன மழை பெய்யும் என்று வானிலை மையம் அறிவித்து இருந்த நிலையில் நாகர்கோவில் போன்ற பல்வேறு பகுதிகளில் கன மழை கொட்டி தீர்த்தது. இதனையடுத்து மயிலாடியில் பெய்த கன மழையால் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கி காணப்பட்டது. மேலும் கொட்டாரம், ஆரல்வாய்மொழி, அஞ்சுகிராமம், தக்கலை, குழித்துறை, அருமனை, பூதப்பாண்டி, இரணியல், களியல் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த மழை பெய்தது.
இதன் காரணமாக அருவிகளில் வெள்ளம் ஆர்ப்பரித்து கொட்டி வருவதால் அருவியில் குளிப்பதற்கு சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டது. எனவே பாலமோர் பகுதிகளில் பெய்யும் கனமழையினால் அணைகளுக்கு வரக்கூடிய நீர்வரத்து சற்று அதிகரித்துள்ளது. இந்நிலையில் பெருஞ்சாணி, சிற்றாறு, பேச்சிப்பாறை அணைகள் முன்பே நிரம்பியிருப்பதால் நீர்மட்டத்தை பொதுப்பணித்துறை அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர்.