தர்மபுரியில் பரவலாக பெய்த மழையினால் விவசாயிகள் மகிழ்ச்சியில் இருக்கின்றனர்.
தர்மபுரி மாவட்டம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியின் பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்தது. இந்த மழையினால் தர்மபுரி மாவட்டம் முழுவதிலும் குளிர்ச்சியான சூழல் ஏற்பட்டது. மேலும் மாவட்டத்தின் சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஆடிப்பட்டத்தில் விவசாய சாகுபடிக்கு உறவு நடந்த நிலங்களில் மழையினால் ஈரப்பதம் ஏற்பட்டது. இதனால் பயிர் சாகுபடியில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.