தார் சாலை அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்ககோரி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தஞ்சாவூர் மாவட்டம் ஈஸ்வரி நகர் ரெட்டிபாளையம் சாலையில் உள்ள கோபாலபுரம் விரிவாக்கம் பகுதியில் பல வருடங்களாக தார்சாலை வசதி இல்லாமல் இருக்கிறது. இந்நிலையில் அப்பகுதியில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழையின் காரணமாக சாலையில் மழைநீர் தேங்கி சேறும் சகதியுமாக காட்சி அளிக்கிறது. மேலும் தேங்கி நிற்கும் மழைநீரில் கொசுக்கள் உற்பத்தியாகி நோய் தொற்று பரவும் அபாயம் இருக்கிறது. ஆகவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக தார் சாலையை அமைத்து தர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.