Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

கொத்தனாருக்கு நேர்ந்த கொடூரம்…. தந்தை உட்பட 3 பேர் கைது…. நீதிபதியின் அதிரடி தீர்ப்பு….!!

கொத்தனார் கொலை வழக்கில் தந்தை உட்பட 3 பேருக்கு ஆயுள் தண்டனையை விதித்து நீதிபதி தீர்ப்பு வழங்கியுள்ளார்.

தென்காசி மாவட்டத்தில் உள்ள மேலூர் அண்ணா தெருவில் கொத்தனார் முருகேஷ் குமார் வசித்து வந்தார். அதே பகுதியில் திருமலையாண்டி என்பவர் வசித்து வருகின்றார். இவருக்கு மணிகண்டன், மாரியப்பன் ஆகிய 2 மகன்கள் இருக்கின்றனர். இந்த 2 மகன்களும் ஆட்டோ டிரைவர்களாக பணி புரிந்தனர். கடந்த 9. 1.2015 அன்று மணிகண்டனுக்கும், முருகேஷ் குமாரின் நண்பரான ரூபனுக்கும் இடையில் தகராறு ஏற்பட்டது. அப்போது தகராறில் ரூபன் காயமடைந்தார். இதனையறிந்த முருகேஷ் குமார் மணிகண்டனை கண்டித்தார்.

இதுகுறித்து மணிகண்டன் தன் குடும்பத்தினரிடம் தெரிவித்தார். இந்நிலையில் மணிகண்டன், அவருடைய தம்பி மாரியப்பன், தந்தை திருமலையாண்டி ஆகிய 3 பேரும் முருகேஷ் குமாரின் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து அவரை சரமாரியாக தாக்கினர். இதனால் படுகாயமடைந்த முருகேஷ் குமார் பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இது தொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து மணிகண்டன் உட்பட 3 பேரையும் கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணையானது தென்காசி மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

இந்நிலையில் வழக்கை விசாரித்த நீதிபதி அனுராதா குற்றம் சாட்டப்பட்ட மணிகண்டன், மாரியப்பன், திருமலையாண்டி ஆகிய 3 பேருக்கும் ஆயுள் தண்டனை மற்றும் தலா 6 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து தீர்ப்பு வழங்கியுள்ளார். இந்த அபராத தொகையை அவர்கள் செலுத்த தவறினால் மேலும் 2 ஆண்டு சிறைதண்டனை அனுபவிக்க வேண்டும் என நீதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார். அதன்பின் அவர்கள் 3 பேரும் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

Categories

Tech |