வேலூர் மாவட்டத்தில் சீனாவிலிருந்து வந்த 38 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருக்குமோ என்ற சந்தேகத்தில் அவர்களை வீட்டிலேயே வைத்து மருத்துவர்கள் கண்காணித்து வருகின்றனர்.
அரக்கோணம் திருப்பத்தூர், ஜோலார்பேட்டை, வேலூர் போன்ற ஊர்களை சேர்ந்த இவர்களை அவரவர் வீட்டிலேயே தனியாக வைத்து கண்காணிக்கப்பட்டு வருவதாக சுகாதார துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
28 நாட்கள் வரை அவர்கள் மருத்துவ குழு கண்காணிப்பிலேயே இருப்பார்கள் என்று அவர்கள் கூறியுள்ளனர். இதனிடையே வேலூரில் தனியார் கல்லூரியில் நடைபெற்ற கொரோனா வைரஸ் விழிப்புணர்வு முகாமில் பங்கேற்ற மாணவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு மருத்துவர்கள் பல்வேறுஅறிவுரைகளை வழங்கினார்.
காற்றின் மூலம் பரவக்கூடியது கொரோனா வைரஸ் என்பதால் எளிதில் மற்றவர்களுக்கு தொற்றக் கூடும் என்று அவர்கள் தெரிவித்தனர். தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டால் அந்த நோயிலிருந்து தற்காத்துக் கொள்ளலாம்.
கைகளை கழுவி சுத்தமாக வைத்திருக்கவேண்டும். கூட்டமாக இருக்கும் இடங்களுக்கு செல்லக்கூடாது,தும்மும் போதும், இருமும் போதும் முகத்தை கைகளால் மூடிக் கொள்வது அவசியம்.
தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவ வாய்ப்பு இல்லை என்று தெரிவித்துள்ள மருத்துவர்கள் இருந்தாலும் விழிப்புணர்வு மிகவும் அவசியம் என்று தெரிவித்துள்ளார்.