கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் பொதுமக்கள் ஆர்வத்துடன் தடுப்புசி செலுத்தி வருகின்றனர்.
திருவாரூர் மாவட்டத்திலுள்ள நீடாமங்கலம் வட்டாரம் கோவில்வெண்ணி அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் தடுப்பூசி செலுத்தும் முகாம் இரண்டு பள்ளிகளில் வைத்து நடைபெற்றது. இந்த முகாம் டாக்டர் ராணிமுத்துலட்சுமி தலைமையிலும், சுகாதார ஆய்வாளர் சிவக்குமார் மேற்பார்வையிலும் நடத்தப்பட்டது.
இந்த இரண்டு முகாம்களிலும் 18 வயது முதல் 44 வயது வரை இருப்பவர்கள் 278 பேரும், 45 வயது முதல் 60 வயது வரை இருப்பவர்கள் 107 பேரும் என மொத்தம் 385 பேர் ஒரே நாளில் கோவிஷீல்டு கொரோனா தடுப்பூசியை முதல் தவணையாக செலுத்தி கொண்டனர். இவ்வாறு கொரோனா தொற்றின் தாக்கம் அதிகரித்து வருவதால் மக்கள் ஆர்வத்துடன் தடுப்பூசி செலுத்தி வருகின்றனர். இதனையடுத்து தடுப்பூசி செலுத்தும் முகாமை மன்னார்குடி டி.ஆர்.பி ராஜா எம்.எல்.ஏ நேரில் சென்று பார்வையிட்டுள்ளார்.