Categories
தேசிய செய்திகள்

கொரோனாவே இல்லாத தாராவி… பொதுமக்கள் உச்சகட்ட மகிழ்ச்சி…!!!

ஆசியாவின் மிகப்பெரிய குடிசைப் பகுதியான மும்பை தாராவியில் கொரோனா வைரஸ் பாதிப்பு யாருக்கும் இல்லை என்பது மக்களுக்கு நம்பிக்கை அளித்துள்ளது.

சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ், தற்போது உலக நாடுகள் முழுவதிலும் பரவி அனைவரையும் ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கிறது. அதனால் தற்போது வரை ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. அதற்கு எதிரான தடுப்பூசி கண்டறியும் முயற்சியில் உலக நாடுகள் அனைத்தும் தீவிரம் காட்டி வருகின்றன. சில நாடுகளில் கொரோனா தடுப்பு ஊசி இறுதிகட்ட பரிசோதனையை எட்டியுள்ளது. இருந்தாலும் சில நாடுகளில் கொரோனாவின் தாக்கம் இன்னும் குறையாமல் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது.

இந்நிலையில் ஆசியாவின் மிகப்பெரிய குடிசை பகுதியாக மும்பையின் தாராவி பகுதியில் இரண்டு சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் ஐந்து லட்சத்திற்கும் அதிகமான மக்கள் வாழ்ந்து வருகின்றனர். இங்கு தமிழர்கள் கணிசமாக வசித்து வருகின்றனர். இந்நிலையில் தாராவியில் இன்று புதிதாக யாருக்கும் வைரஸ் தோற்று உறுதி செய்யப்படவில்லை என்று தகவல் வெளியாகி அப்பகுதி மக்களுக்கு நம்பிக்கை அளித்துள்ளது.

Categories

Tech |