சமூக இடைவெளி கடைபிடிக்க முடியாது என்பதால் சுதந்திர தினத்தன்று நடைபெற இருக்கும் கிராம சபைக் கூட்டங்கள் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
குடியரசு தினம், உழைப்பாளர்கள் தினம், சுதந்திரதினம் மற்றும் காந்தி ஜெயந்தி என ஆண்டுக்கு 4 முறை கிராம ஊராட்சிகளில் கிராமசபை கூட்டம் நடத்தப்படுவது வழக்கம். இதில் ஊராட்சியின் வரவு செலவுகள் திட்டப்பணிகள் பயனாளிகள் தேர்வு செய்து ஒப்புதல் பெறப்படும். இந்நிலையில் கடந்த மே மாதம் நடக்க வேண்டிய கிராம சபை கூட்டம் கொரோனா பரவல் காரணமாக ரத்து செய்யப்பட்டது.
இதுகுறித்து இன்று 15-ம் தேதி சுதந்திர தினத்தன்று கிராமசபை நடத்தப்பட வேண்டும். ஆனால் இக்கூட்டத்தையும் கொரோனா காரணத்தைக் காட்டி தமிழக அரசு ஒத்திவைத்துள்ளது. கிராம சபை கூட்டம் எப்போது நடக்கும் என்பது குறித்த தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துருக்கிறது.