கொரோனா தொற்றுடன் மருத்துவமனையில் இருந்து தப்பிய இளம் விமானி கழுத்து துண்டிக்கப்பட்டு சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ரஷ்யாவில் சோலார் விமான சேவை நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த இளம் விமானி கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டதையடுத்து மருத்துவமனையில் இருந்து மாயமானார். இந்நிலையில் ஒரு வாரத்திற்குப் பிறகு அவர் கழுத்து துண்டாக்கப்பட்டு சடலமாக கண்டெடுக்கப்பட்டார்.
விசாரணை மேற்கொண்ட அதிகாரிகள் மருத்துவமனையைச் சுற்றி இருந்த இரும்பு வேலியை தாண்டும் போது ஏற்பட்ட காயம் ஆக இருக்கலாம் என்று கூறுகின்றனர். மருத்துவமனையில் இருந்து வெகு தொலைவில் இருக்கும் புதரில் அவரது சடலம் கண்டெடுக்கப்பட்டது. சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்தும் இது தொடர்பாக எந்த முடிவும் காவல்துறையினருக்கு எடுக்க முடியவில்லை என்று கூறப்படுகிறது.