கொரோனாவால் வாடிகனில் உள்ள அருங்காட்சியங்கள், புனித தலங்கள், சுற்றுலா தலங்கள், மூடப்பட்டுள்ளதால் 50 மில்லியன் பவுண்ட் வருமான இழப்பு ஏற்பட்டுள்ளது. என்று போப் ஆண்டவர் பிரான்சிஸ் கூறியுள்ளார்.
சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் கடந்த ஆண்டு மார்ச் மாதம் உலக நாடுகள் முழுவதிலும் பரவ தொடங்கியது. அதனால் தற்போது வரை ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டு உள்ளது. அதனால் கொரோனா எதிரான தடுப்பு ஊசிகள் கண்டறியும் முயற்சியில் இந்தியா உள்ளிட்ட பல நாடுகளில் தீவிரம் காட்டி வந்த நிலையில் தடுப்பூசிகள் உலகம் முழுவதிலும் போடப்பட்டு வருகிறது. மேலும் இந்தியா ஜெர்மனி உள்ளிட்ட பல நாடுகளில் கொரோனா வைரஸின் தாக்கம் குறைந்து வந்த நிலையில் தற்போது ஐரோப்பிய நாடுகளான ஜெர்மனி உள்ளிட்ட பல்வேறு நாடுகளிலும் கொரானா பாதிப்பு அதிகரிக்க தொடங்கியுள்ளது. அதனால் மக்கள் அனைவரும் அச்சத்தில் உள்ளனர்.
இந்நிலையில் உலக நாடுகள் அனைத்தும் பொருளாதார ரீதியில் பெரும் பாதிப்புகளை சந்தித்துள்ளது. அதனால் வாடிகனில் கொரோனாவால் அருங்காட்சியங்கள், புனிதத் தலங்கள் ,சுற்றுலா தலங்கள் போன்றவைகள் மூடப்பட்டு உள்ளது. அதனையடுத்து வாடிகனில் இந்த ஆண்டு மட்டும் 50 (சுமார்ரூ500கோடி)மில்லியன் பவுண்ட் வருமான இழப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் கார்டினல்களுக்கும் பிற மத குருக்களுக்கும் வருகிற ஏப்ரல் மாதம் முதல் சம்பளம் குறைந்துள்ள உத்தரவை போப் ஆண்டவர் பிரான்சிஸ் கூறியுள்ளார்.
இந்நிலையில் கார்டினல்கள் தற்போது வரை மாத சம்பளம் 5,000 பவுண்ட் (சுமார்ரூ.5லட்சம்)பெற்று வருகிறார்கள்.அவர்களுக்கு சம்பள குறைப்பு 10 சதவீத அளவில் இருக்கும் என்றும் மதகுருக்களுக்கு 3 சதவீதம் முதல் 8 சதவீதம் வரை சம்பள குறைக்கப்பட்டது என்று அவர் தெரிவித்துள்ளார். மேலும் இந்த நிதி நெருக்கடி காரணமாக யாருக்கும் வேலை இழப்பு ஏற்படாது என்று அவர் கூறியுள்ளார்.