Categories
தேசிய செய்திகள்

“கொரோனா பெருந்தொற்று”… மனநலப் பிரச்சனையை சந்திக்கும் இளைஞர்கள்…. கடும் எச்சரிக்கை…!!!!

கொரோனா உள்ளிட்ட சவால்களால் தீவிர மனநலப் பிரச்சனையை இளம் தலைமுறையினர் சந்திப்பதாக இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர் தெரிவித்துள்ளார்.

கொரோனா தொற்று உள்ளிட்ட சவால்களை எதிர்கொள்ளும் இளம் தலைமுறையினர் தீவிர மனநலம் தொடர்பான பிரச்சனைகளை சந்திப்பதாக அமெரிக்க சர்ஜன் ஜெனரலும், இந்திய வம்சாவளியை சேர்ந்தவருமான விவேக் மூர்த்தி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இதுகுறித்து விவேக் மூர்த்தி பேசியதாவது “கொரோனா காலத்தில் கவலை, மனச்சோர்வுக்கான அறிகுறிகள் இருமடங்காக அதிகரித்துள்ளது. மேலும் வன்முறைகள், வானிலை மாற்றம், நிறவெறி மற்றும் சமூக பிரச்சனைகள் மன அழுத்தத்திற்கான முக்கிய காரணமாக இருப்பதாக கூறியுள்ளார். அதுமட்டுமின்றி தற்போதைய சூழலில் மனநலம் பேணும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டியது மிகவும் அவசியம்” என்று அவர் அறிவுறுத்தியுள்ளார்.

Categories

Tech |