அரியலூர் மாவட்டத்தில் உள்ள ஆண்டிமடம் பகுதியில் கட்டுப்பாடு விதிமுறைகளை பின்பற்றாமல் பலர் வெளியே சுற்றுகின்றனர்.
தமிழகத்தில் வேகமாக பரவி வரும் கொரோனாவை கட்டுப்படுத்த அரசு முழு ஊரடங்கு அமல்படுத்தி உள்ளது. இதனால் பொதுமக்கள் கட்டுப்பாடு விதிமுறைகளை முறையாக பின்பற்றுகின்றனரா என காவல்துறையினர் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். இந்நிலையில் அரியலூர் மாவட்டத்தில் உள்ள ஆண்டிமடம் பகுதியில் கொரோனா தொற்று அச்சமில்லாமல் ஏராளமான பொதுமக்கள் வெளியே வருகின்றனர்.
இவர்களை காவல்துறையினர் நிறுத்தி விசாரித்தபோது உணவு மற்றும் மருந்துகளை வாங்க செல்வதாக தெரிவிக்கின்றனர். இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறும்போது தேவையில்லாத காரணத்திற்காக வெளியே சுற்றுபவர்களை பிடித்து அபராதம் விதித்த போதிலும் பலர் அதனை பொருட்படுத்தாமல் வெளியில் சுற்றுவதாகவும் தெரிவித்துள்ளனர். எனவே சுகாதாரத்துறையினர் அப்பகுதியில் ஒரு முகாம் அமைத்து தடுப்பூசி போடுவதற்கு ஏற்பாடு செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.