Categories
தேசிய செய்திகள்

ஒரு கோடி தடுப்பூசி இருப்பு உள்ளது…. 16.16 கோடி தடுப்பூசி வழங்கப்பட்டது….தகவலை வெளியிட்டது மத்திய சுகாதார அமைச்சகம்….!!

இதுவரை 16 கோடியே 16 லட்சம் தடுப்பூசிகள் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தகவல் வெளியிட்டுள்ளது.

மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவலில் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு இதுவரை 16 கோடியே 16 லட்சம் தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளதாகவும் அனைத்தும் இலவசமாகவே வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது. மேலும் மாநிலங்களில் தற்போது ஒரு கோடி தடுப்பூசிகள் இருப்பு இருப்பதாகவும் அடுத்த மூன்று நாட்களுக்குள் மேலும் 20 லட்சம் தடுப்பூசிகள் மாநிலங்களுக்கு பிரித்து அளிக்கப்படவுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

குறிப்பாக தமிழகத்திற்கு இதுவரை 65 லட்சத்து 28 ஆயிரத்து 950 தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளதாகவும் அதில் 8.53 சதவீதம் அளவுக்கு தடுப்பூசிகள் வீணாகபட்டதும் குறிப்பிடத்தக்கது. மேலும் தமிழகத்தில் 62 லட்சத்து 97 ஆயிரத்து 271 பேர் தற்போது வரை தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ளனர் என்ற தகவலும் வெளியாகியுள்ளது.

Categories

Tech |