கோவிட்ஷீல்டு தடுப்பூசியை சீரம் நிறுவனம் தயாரித்து இவ்வளவு விலைக்கு விற்கப்போவதாக அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.
இந்தியாவில் கொரோனா வைரஸின் இரண்டாவது அலை வேகமாக பரவத் தொடங்கியுள்ளது. இந்நிலையில் இந்தியாவிலுள்ள மகாராஷ்டிர மாநிலத்தில் சீரம் நிறுவனம் ஒன்று தற்போது கோவிட்ஷீல்டு தடுப்பூசியை தயார் செய்து வருகிறது. இந்த நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் மே மாதம் 1 ஆம் தேதி முதல் தனியார் மருத்துவமனைகள் மற்றும் மாநிலங்கள் தடுப்பூசியை நேரடியாக கொள்முதல் செய்து கொள்ளலாம் எனவும் மாநிலங்களுக்கு ஒரு டோஸ் 400 எனவும் தனியார் மருத்துவமனைகளுக்கு ஒரு டோஸ் 500 எனவும் விற்பனை செய்யப்படும் என்று தெரிவித்துள்ளது.
மேலும் மத்திய அரசுக்கு தற்போது வழங்கப்பட்டு வரும் விலையில் எந்தவித மாற்றமும் இருக்காது என அந்நிறுவனம் அதிகாரபூர்வமாக தெரிவித்துள்ளது. மேலும் கோவிட்ஷீல்டு தடுப்பூசி அமெரிக்காவில் இந்திய மதிப்பில் ரூபாய் 1500 ஆகவும் சீனா மற்றும் ரஷ்யாவில் ரூபாய் 750 ஆகவும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.