கொரோனா தடுப்பூசி ஒத்திகைகள் முடிந்ததும் பொதுமக்களுக்கு தடுப்பூசி செலுத்தப்படும் என்று மத்திய சுகாதார அமைச்சர் ஹர்ஷவர்தன் தெரிவித்துள்ளார்.
நாடு முழுவதும் கடந்த ஆண்டு கொரோனா என்ற கொடிய வைரஸ் மக்களை பாடாய் படுத்தியது. இந்நிலையில் கொரோனா வைரஸ் நோயின் தாக்கம் படிப்படியாக குறைந்து வருகிறது. மத்திய அரசு அதற்கு உரிய தடுப்பூசிகளை கண்டுபிடித்துள்ளது. அதன் ஒத்திகைகள் நடந்துகொண்டு வருகிறது. இதுகுறித்து மத்திய சுகாதார அமைச்சர் ஹர்ஷவர்தன் தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து ஆலோசனை மேற்கொண்டார்.
அதன் பின் செய்தியாளர்களை சந்தித்த அவர், கொரோனா தடுப்பு பணியில் முதலமைச்சர் சிறப்பாக பணியாற்றி வருவதால் அவருக்கு பிரதமர் சார்பாக நான் பாராட்டுக்களைத் தெரிவித்தேன். கொரோனா தடுப்பூசி ஒத்திகை இன்னும் முழுமையாக முடியவில்லை. அவை முடிந்த பின்பு பொது மக்களுக்கு தடுப்பூசி போடுவது தொடர்பான அறிவிப்பை கூடிய விரைவில் அறிவிப்போம். இன்று காலை முதல் பல்வேறு இடங்களில் கொரோனா தடுப்பூசி முன்னேற்பாடுகள் தொடர்பாக ஆய்வு செய்தேன். இந்த ஆய்வு எனக்கு மன திருப்தி அளித்துள்ளது. எனவே கூடிய விரைவில் பொதுமக்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணி நடைபெறும் என்று தெரிவித்தார்.