Categories
மாநில செய்திகள்

மருத்துவமனையில் இடமில்லை…. ஆட்டோவில் சிகிச்சை பெரும் நோயாளி…. வைரலாக வீடியோ….!!

கொரோனாவால் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு ஆட்டோவில் வைத்து சிகிச்சை அளிக்கப்படும் வீடியோ வெளியானதால் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.

கொரோனா இரண்டாவது அலை இந்தியாவில் வேகமாகப் பரவி வருகிறது. இதில் மகாராஷ்டிரா மாநிலத்தில் நேற்று புதிதாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 51,251 பேர். மேலும் 258 பேர் நேற்று மட்டும் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். இந்த மாநிலத்தில் தொற்ற வேகமாக அதிகரித்து வருவதால் நோயாளிகள் மருத்துவமனைகளில் குவிந்து வருகின்றனர்.

ஆனால் மருத்துவமனைகளில் படுக்கை வசதி தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் சடாரா மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு ஆட்டோவில் வைத்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த வீடியோ இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதில் பாதிக்கப்பட்ட பெண் ஆட்டோவினுள் அமர்ந்து இருக்க அவருக்கு சிலிண்டரில் இருந்து குழாய் மூலம் ஆக்சிஜன் உதவி அளிக்கப்படுகிறது. இதனை கண்ட மக்கள் மாநிலத்தில் உள்ள மைதானங்களை மருத்துவ மையங்களாக மாற்ற வேண்டும் என கருத்து தெரிவித்துள்ளனர்.

Categories

Tech |