Categories
மாநில செய்திகள்

கொரோனா நோயாளிக்கு குடிக்க என்ன கொடுத்தார்….? வீடியோவை நீக்கியது ஏன்….? பாஜக தலைவரால் எழுந்த சர்ச்சை….!!

பாஜக தலைவர் பெண் கொரோனா நோயாளியை பசுவின் சிறுநீர் குடிக்க வைத்துள்ளார் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

குஜராத் மாநிலத்தின் சூரத் நகரின் பாஜக பொதுச்செயலாளர் கிஷோர்பாய் பிண்டால் என்பவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் கொரோனா நோயாளிகளை நேரில் சந்தித்து அவர்களுக்கு ஜூஸ் கொடுப்பது, சாப்பாடு கொடுப்பது, தனது போன் மூலம் அவர்களது குடும்பத்தினருக்கு வீடியோ கால் செய்து கொடுப்பது போன்ற அனைத்தையும் செய்து வீடியோவாக பதிவு செய்து அதனை சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றார்.

இந்நிலையில் வெண்டிலேட்டரில் சிகிச்சையில் இருக்கும் பெண் கொரோனா நோயாளிக்கு மஞ்சள் நிறத்தில் இருக்கும் ஏதோ ஒன்றை அவர் குடிக்க வைத்துள்ளார். அந்த வீடியோ அவர் தனது ட்விட்டரில் பக்கத்தில் வெளியிட்டிருந்தார். பின்னர் சிறிது நேரத்தில் அந்த வீடியோவை நீக்கி விட்டார். இந்த வீடியோவை கண்ட சில பேர் அவர் கொரோனா நோயாளிக்கு பசுவின் சிறுநீரை குடிக்க வைத்ததாகக் குற்றம் சாட்டி வருகின்றனர். மேலும் அவர் இந்த வீடியோவை தனது ட்விட்டர் பக்கத்தில் இருந்து நீக்கியதால் அது உண்மையாக கூட இருக்கலாம் என சந்தேகம் எழுந்துள்ளது. இது குறித்து தொடர்ந்து சர்ச்சை எழுந்து வருகிறது.

Categories

Tech |