Categories
உலக செய்திகள்

கொரோனா எதிரொலி… நாடு முழுவதும் மீண்டும் ஊரடங்கு… வெளியான அதிரடி அறிவிப்பு….!!!

ஜெர்மனியில் கொரோனா பாதிப்பு மிக அதிகமாக இருப்பதால் ஏப்ரல் 18ஆம் தேதி வரை ஊரடங்கை நீட்டித்து அந்நாட்டு அரசு உத்தரவிட்டுள்ளது.

சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் கடந்த ஆண்டு மார்ச் மாதம் உலக நாடுகள் முழுவதிலும் பரவ தொடங்கியது. அதனால் தற்போது வரை ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டு உள்ளது. அதனால் கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசி கண்டறியும் முயற்சியில் இந்தியா, ஜெர்மனி உள்ளிட்ட பல நாடுகள் தீவிரம் காட்டி வந்த நிலையில் கொரோனா தடுப்பூசிகள் உலகம் முழுவதிலும் போடப்பட்டு வருகிறது. மேலும் இந்தியா, ஜெர்மனி உள்ளிட்ட பல நாடுகளில் கொரோனா வைரஸ் தாக்கம் குறைந்து வந்த நிலையில், தற்போது ஐரோப்பிய நாடுகளான ஜெர்மனி உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரிக்க தொடங்கியுள்ளது. அதனால் மக்கள் அனைவரும் அச்சத்தில் உள்ளனர்.

இந்நிலையில் ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான ஜெர்மனி கொரோனாவால் அதிகமாக   பாதிக்கப்பட்டுள்ளது. அதன்படி கடந்த சில நாட்களாகவே அங்கு கொரோனா பாதிப்பு நாளுக்குநாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது. அதுமட்டுமன்றி கொரோனாவால்  75,000க்கும் மேற்பட்டோர்  உயிரிழந்துள்ளனர். மேலும்  இதுவரை 26 லட்சத்து 78 ஆயிரத்து மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.அதன்காரணமாக  அந்நாட்டில் முழு ஊரடங்கு  அமல்படுத்தப்பட்டுள்ளது. தற்போது வரபோகிற  ஈஸ்டர்  பண்டிகையில் மக்கள் ஒன்று கூடினால் கொரோனா பாதிப்பு அதிகரிக்க வாய்ப்பு உள்ளது என அந்நாட்டு தேசிய நோய் தடுப்பு மையம் எச்சரித்துள்ளது.

இதனையடுத்து அந்நாட்டின் பிரதமர் ஏஞ்சலா மெர்கல் இந்த வைரஸின் பாதிப்பைக்
கட்டுப்படுத்துவதை பற்றி ஆளுநருடன் ஆலோசனை நடத்தினார் . அதில் கொரோனா பரவலை  கட்டுப்படுத்த அடுத்த ஏப்ரல் மாதம் 18ஆம் தேதி வரை ஊரடங்கு  நீட்டிக்க படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது . மேலும் ஈஸ்டர் விடுமுறை ஏப்ரல் 1முதல் 5 நாட்களும்  பொதுமக்கள்  வெளியே  வர  தடை விதிக்கப்பட்டுள்ளது. அதனால் தேவாலயங்கள் நிகழ்ச்சிகள் அனைத்தும் ஆன்லைனில் நடத்த வேண்டுமென்றும் கூறியுள்ளார்.  நாடு முழுவதும் முழு ஊரடங்கில் இருக்கும் போது  கொரோனா  பரிசோதனை மற்றும் தடுப்பூசிகள் மையங்கள் மட்டுமே திறந்திருக்கும் என்றும் அவர்  கூறியுள்ளார்.

Categories

Tech |