Categories
மாநில செய்திகள்

கொரோனா அபாயம்!…. நாளை முதல் மீண்டும் நடைமுறைக்கு வரும் கட்டுப்பாடுகள்…. அரசு வெளியிட்ட அறிவிப்பு….!!!!

சீனாவில் பிஎப்7 புது வகை கொரோனா தொற்று வேகமாக பரவி வருவதால் மத்திய-மாநில சுகாதாரத்துறை அறிவுறுத்தலின்படி சுகாதாரத்துறை இணை இயக்குனர் அர்ஜுன் குமார் உத்தரையின் படி தமிழகத்தில் உள்ள விமான நிலையங்களில் தீவிர கண்காணிப்பு மற்றும் பரிசோதனைகள் நாளை (டிச..24) முதல் நடைமுறைக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் விமான நிலைய உள்வளாகத்திற்குள் வருபவர்கள் 2 தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும் (அ) கொரோனா இல்லை என சான்று வைத்திருக்க வேண்டும்.

அத்துடன் முகக்கவசம் அணிந்திருந்தால் மட்டுமே அனுமதிக்கப்படுவர் என சுகாதாரத்துறை அறிவித்து உள்ளது. விமான நிலையத்தில் வெளிநாடுகளிலிருந்து வரும் பயணிகளுக்கு ரேண்டம் முறையில் 2 சதவீத மாதிரிகளை சேகரித்து பரிசோதனைகள் மேற்கொள்ளப்படும். அப்போது பாசிட்டிவ் என தெரிந்தால் விமானத்தில் பயணம் செய்த அனைத்து பயணிகளின் முகவரியிலுள்ள மாவட்டங்களுக்கு தகவல் அனுப்பி அனைத்து பயணிகளுக்கும் பரிசோதனை செய்யப்படும் என்று கூறப்படுகிறது

Categories

Tech |