Categories
உலக செய்திகள்

கொரோனாவின் மூன்றாவது அலை…. ரொம்ப கவனமாக இருக்கனும்…. எச்சரித்தார் ஜெர்மன் சுகாதாரத்துறை அமைச்சர்….!!

நாம் இன்னும் கொரோனாவின் மூன்றாவது அலையில் இருந்து விடுபடவில்லை என எச்சரித்துள்ளார் ஜெர்மன் சுகாதாரத்துறை அமைச்சர்.

ஜெர்மனியில் கொரோனாவின் மூன்றாவது அலை வேகமாக பரவி வருகிறது. ஆனால் தற்போது தீவிர கட்டுப்பாட்டு நடவடிக்கைகளால் அந்த நாட்டின் பல பாகங்களில் கொரோனா சற்று குறைந்துள்ளது. இதனால் தொற்று முழுமையாக குணமடைந்து விட்டதாக நினைக்க வேண்டாம் என ஜெர்மன் சுகாதாரத்துறை அமைச்சர் jens spahn தெரிவித்துள்ளார். மேலும் தடுப்பூசி போட்டுக் கொண்டவர்கள் மற்றும்  தொற்றிலிருந்து  விடுபட்டவர்கள் ஆகியோர்களிடம் நாம் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.

மேலும் தடுப்பூசி போடப்பட்டு வந்தாலும் நாம் இன்னும் கொரோனா மூன்றாவது அலையில் தான் இருக்கிறோம் ஆனால் தொற்று ஏற்பட்டவர்களின் எண்ணிக்கை சற்று குறைந்துள்ளது. ஆனாலும் மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சை பிரிவில் இன்னும் நிரம்பி வழிந்து கொண்டிருக்கின்றன என்பதை நாம் மறக்கக்கூடாது. ஆகவே தொடர்ந்து நாம் கொரோனாவின் மூன்றாவது அலையை எதிர் கொண்டு வெளியில் வருவோம் எனவும்  நம்பிக்கையுடனும் எச்சரிக்கையுடனும் செயல்பட வேண்டும் எனவும் அவர் கூறியிருக்கிறார்.

Categories

Tech |