கொரோனா நோயாளிகளின் உயிரிழப்பு குறித்து வதந்திகளை பரப்புவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
திருப்பத்தூர் மாவட்டத்தில் கொரோனா தொற்று மிக வேகமாக பரவி வருகின்றது. இதனால் மாவட்ட நிர்வாகம் தொற்றை கட்டுப்படுத்தும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. இந்நிலையில் திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்பட்டதால் கொரோனா நோயாளிகள் 4 பேர் உயிரிழந்ததாக கூறப்படுகின்றது.
இதுகுறித்து மாவட்ட கலெக்டர் சிவன் அருள் கூறியபோது, திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் தற்போது 230 கொரோனா நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர். எனவே 1.5 டன் திரவ ஆக்சிஜன் பிளானட் மருத்துவமனையில் இருக்கின்றது. அதுமட்டுமன்றி நோயாளிகளுக்கு 1.5 டன் திரவ ஆக்சிஜன் பிளானட் போடப்பட்டு, 30 ஆக்சிஜன் சிலிண்டர்கள் கைவசம் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
இதனைதொடர்ந்து கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்படும் நபர்களுக்கு ஆக்சிஜன் செலுத்தப்பட்டு வருகின்றது. இதனையடுத்து திருப்பத்தூர், வாணியம்பாடி, நாட்டறம்பள்ளி, ஆம்பூரில் இருக்கும் அரசு மருத்துவமனையில் புதிதாக ஆக்சிஜன் உற்பத்தி பிளானட் 10 நாட்களில் நிறுவப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. மேலும் மூச்சுத் திணறல் போன்ற காரணங்களால் இறந்தவர்களை, கொரோனா நோயாளிகள் ஆக்சிஜன் தட்டுப்பாட்டால் உயிரிழந்ததாக வதந்திகளை பரப்புபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் சிவன் அருள் எச்சரித்துள்ளார்.